கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் இயங்கி வந்த ஒரேயொரு எக்ஸ்ரே இயந்திரமும் பழுதடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இயந்திரம் கடந்த வாரம் பழுதடைந்ததாக அரச கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இரண்டரை மாதங்களுக்கு முன், பிரதான எக்ஸ்ரே இயந்திரம் பழுதாகியிருந்ததாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்பின், தற்போது பழுதடைந்துள்ள எக்ஸ்ரே இயந்திரத்தை பயன்படுத்தி, எக்ஸ்ரே பரிசோதனைகள் நடத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இயந்திரம் பழுதடைந்துள்ளமை தொடர்பில் உரிய தரப்பினருக்கு அறியப்படுத்தாமையினாலேயே இயந்திரத்தை புனரமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

