சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மிச்சாங் புயல் காரணமாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. நேற்று மாலை தொடங்கிய கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்றிரவு முதல் பலத்த காற்று வீசி வருகிறது.பலத்த காற்று காரணமாக மரங்கள் ஆங்காங்கே விழுந்துள்ளன.
இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டிற்கு பாதுகாப்பாக இருக்கும்படி அறிவிறுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில் வேளச்சேரியில் அடிக்குமாடி கட்டம் ஒன்று தரையில் இறங்கியதாக கூறப்படுகிறது.
பலர் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விபத்து ஏற்பட்ட இடத்திற்கு தீயணைப்புப்படை வீரர்கள் விரைந்துள்ளனர். இருவர் மீட்கப்பட்ட நிலையில் ஒருவரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

