ரணில் – பிரேசில் ஜனாதிபதி விசேட சந்திப்பு

159 0

 

வெப்ப வலய நாடுகளான இலங்கை மற்றும் பிரேசில் ஆகியவற்றை பாதிக்கக்கூடிய விடயங்களுக்குத் தீர்வு காண ஒன்றுபடுமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரேஸில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலாடா சில்வாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

டுபாயில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாடான கோப்28க்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலாடா சில்வா ஆகியோருக்கு இடையிலான முக்கிய சந்திப்பு நேற்று சனிக்கிழமை (2) நடைபெற்றது.

அந்த சந்திப்பின்போதே ஜனாதிபதி இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அத்தோடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலாடா சில்வாவை இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.