கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியிருந்தன. இந்தநிலையில், நாடளாவிய ரீதியில் பல பாடசாலைகளில் சாதனை பெறுபேறுகள் பதிவாகியுள்ளதுடன், மிக அதிகளவானோர் சிறந்த பெறுபேறினைப் பெற்றுள்ளனர்.
இந்தநிலையில், அகில இலங்கை ரீதியில் 6ஆம் இடத்தினையும், தமிழ் மொழி மூலமாக இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்ட திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் மாணவி தர்சனாவை, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். மாணவியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து அவர்களின் கல்வி நடவடிக்கையில் அக்கறை செலுத்திய அதிபர், ஆசிரியர்கள் பெற்றோர் மற்றும் வலய கல்வி பணிப்பாளர் ஆகியோரை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடியதுடன் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் கிழக்கு ஆளுநர் தெரிவித்தார்.மேலும், மாணவியின் வேண்டுகோளின் பேரில் பாடசாலை பல நாட்களாக நிலுவையில் இருந்த காணியை அப்பாடசாலைக்கு வழங்குவதற்கான நடவடிக்கையும் ஆளுநரால் மேற்கொள்ளப்பட்டது.

