திருகோணமலை – தம்பலகாமம் பகுதியில் வாய்க்காலில் விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தம்பலகாமம் – முள்ளிப்பொத்தானை 10 ஆம் கொலனியில் வீடொன்றுக்கு முன்பாக மழைக்காலம் காரணமாக வாய்க்காலில் ஓடிய தண்ணீரில் விழுந்து சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரிஹால் அமல் ஹாஜர் என்ற நான்கு வயது முன்பள்ளிச் சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
“தந்தை வீட்டின் முன்பாக வாகன பற்றரி மாற்றிக் கொண்டிருந்த போது, சிறுமி அருகில் இருந்துள்ளார்.
இந்த தருணத்தில் வாய்க்கால் அருகே சிறுமி சென்றபோது, அவர் அணிந்திருந்த செருப்பொன்று தவறி வாய்க்காலுக்குள் விழுந்துள்ளது.
அதை எடுக்க முயன்றபோது, சிறுமி வாய்க்காலுக்குள் தவறி விழுந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், வாய்க்காலுக்குள் தவறி விழுந்த சிறுமி வாய்க்கால் வெள்ளத்தில் 500 மீற்றர் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சடலமாக மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

