யக்கல – கெசேல்வத்துகொட பிரதேசத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பேனா வடிவிலான துப்பாக்கியுடன் வெள்ளிக்கிழமை (01) இருவர் யக்கல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் யக்கல பிரதேசத்தை சேர்ந்த 29 மற்றும் 33 வயதுடையவர்களாவர்.
விசாரணையில் 9 மில்லிமீட்டர் நீளமுடைய தோட்டாவொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவர்கள் குற்றச்செயல் ஒன்றிற்காக ஆயத்தமாக இருந்துள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யக்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

