ஜேர்மனியில் வாழும் பெண்ணொருவரைத் தேடி இரண்டு இளம்பெண்கள் வந்தார்கள். அவர்கள் மூவரும் சந்தித்துக்கொண்டபிறகுதான், தங்களைக் குறித்த அதிரவைக்கும் பின்னணியை அவர்கள் அனைவரும் தெரிந்துகொண்டார்கள்.
சமூக ஊடகமொன்றில் தன்னைப்போலவே ஒருவர் இருப்பதைக் கண்ட இளம்பெண்
ஜார்ஜியா நாட்டில் வாழ்ந்துவரும் Ano Sartania (21) எனும் இளம்பெண்ணின் தோழிகள், அவரிடம், தலைமுடியின் நிறத்தை மாற்றிக்கொண்டு சமூக ஊடகத்தில் நடன வீடியோக்கள் போடுவது நீதானே என்று கேட்டிருக்கிறார்கள்.
நமக்கும் நடனத்துக்கும் காத தூரமாயிற்றே என Ano கூற, அவருக்கு சில வீடியோக்களை ஃபார்வேர்ட் செய்திருக்கிறார்கள் தோழிகள். பார்த்தால், வீடியோவிலிருக்கும் பெண் அப்படியே Anoவைப் போல் இருக்கிறார்.
யார் அந்த பெண் என்று விசாரித்து ஒருவழியாக அவரைக் கண்டுபிடித்துவிட்டார் Ano. விசாரித்ததில் அவர் பெயர் Tako Khvitia (21) என்பதும், அவர் தனது சகோதரி என்பதும், தாங்கள் இருவரும் இரட்டைக் குழந்தைகள், பிறந்தபோதே பிரிக்கப்பட்டு, வெவ்வேறு தம்பதியருக்கு தத்துக்கொடுக்கப்பட்டுவிட்டோம் என்பதும் தெரியவந்துள்ளது.
அதிரவைத்த பின்னணி
உண்மை என்னவென்றால், ஜார்ஜியா நாட்டில், குழந்தைகளை அவற்றின் பெற்றோரிடமிருந்து பிரித்து சட்டவிரோதமாக தத்துக்கொடுக்கும் கும்பல்கள் சர்வசாதாரணமாம்.
பிரசவத்துக்குச் செல்லும் தாய்மார்களிடம், பிள்ளை இறந்தே பிறந்தது என்று பொய் சொல்லிவிட்டு, செவிலியர்கள் சிலர் கூட பிள்ளைகளை கருப்புச் சந்தையில் விற்றுவிடும் அநியாயமும் நடக்கிறதாம்.
அவருக்குத் தெரியாது, தான் விற்ற குழந்தைகள் தன் சொந்த மகள்கள் என்பது.
Sartaniaanoo/TikTok
இத்தனை அதிரவைக்கும் உண்மைகளையும் தெரிந்துகொண்டு, DNA பரிசோதனை மூலம், தாங்கள் உண்மையான சகோதரிகள்தான் என்பதையும், தங்களுக்கு இன்னும் ஒரு சகோதரனும் சகோதரியும் இருப்பதையும் அறிந்துகொண்டுள்ளார்கள் Anoவும் Takoவும்.
அத்துடன், தங்களைப் பெற்ற தாய் தற்போது ஜேர்மனியில் வாழ்கிறார் என்பதையும் தெரிந்துகொண்ட பிள்ளைகள், அவரையும் கண்டுபிடித்துவிட்டார்கள். ஆம், ஜேர்மனியில் அந்தப் பெண்ணைத் தேடிவந்த இளம்பெண்கள்தான் இந்த Anoவும் Takoவும்தான்!