கடவலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடவலை பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர் வெல்வெரிய பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடையவராவார்.
கடவலை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேகத்துக்குரிய முச்சக்கர வண்டியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சோதனையின் போது 12 கிராம் 200 மில்லிகிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் , போதைப்பொருள் விற்பனையினால் கிடைத்த 90 ஆயிரத்து 860 ரூபா பணம் , டிஜிட்டல் தராசு மற்றும் கைத்தொலைபேசி ஆகியன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடவலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

