இந்தியாவின் 84-வது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார் தமிழகத்தை சேர்ந்த வைஷாலி

176 0

தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலி இந்தியாவின் 84-வது செஸ் கிராண்ட்மாஸ்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் இவர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறும் முதல் தமிழக வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற எல்லோபிரேகாட் ஓபனில் 2 வெற்றிகளைப் பதிவுசெய்ததன் மூலம் 2,500 புள்ளிகளை வைஷாலி கடந்தார். இவர் இந்திய அளவில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெரும் 3-வது பெண் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.இவர் பிரபல தமிழக செஸ் வீரரும், கிராண்ட் மாஸ்டருமான பிரக்ஞானந்தாவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.