சடலமாக மீட்கப்பட்ட தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் !

72 0

தனியார் தொலைக்காட்சி சேவையொன்றின் ஒளிப்பதிவாளர் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வெயங்கொட, கட்டுவஸ்கொட பகுதியில் இருந்தே குறித்த ஒளிப்பதிவாளரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அத்தனகல பகுதியில் வசிக்கும் ஒரு பிள்ளையின் தந்தையான ஒளிப்பதிவாளரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டவர்  வத்துப்பிட்டிவெல தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வெயாங்கொடை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.