இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே நெடுந்தீவுக்கான விஜயத்தினை மேற்கொண்டார்.
இதன்போது நேற்றையதினம் மேற்கொண்ட இந்த விஜயத்தில் நெடுந்தீவில் வறிய தெரிவுசெய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் உலர் உணவுப் பொருட்களும் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.
நெடுந்தீவில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் ஒன்றினை அமைத்தல் தொடர்பாக இந்திய தூதருடன் இலங்கை மின்சார சபையின் அதிகாரிகளும் இணைந்து இடங்களை சென்று பார்வையிட்டனர்.இந்திய தூதுவரின் தீவக சுற்றுப் பயணத்தில் நெடுந்தீவில் உள்ள புராதன தொல்லியல் சின்னங்கள் உள்ளிட்ட இடங்களையும் தூதர் பார்வையிட்டதுடன் நயினாதீவுக்கு விஜயம் மேற்கொண்டார்.மேலும் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயம், நயினாதீவு நாக விகாரையிலும் வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் நயினாதீவில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் ஒன்றினை அமைப்பது தொடர்பிலும் ஆராய்ந்தார்.

