மலையக மக்களின் வரலாற்று பாடத்தை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் – வடக்கு மாகாண கல்வி பணிப்பாளர்

69 0

மலையக மக்களின் வரலாற்று பாடத்தை அனைவரும் , அனைத்து மாணவர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண கல்வி பணிப்பாளர் ரி. ஜோன் குயின்ரஸ் தெரிவித்தார்.

யாழில் மலையகத்தை உணர்வோம் என்ற தொனிப்பொருளின் விழிப்புணர்வு நிகழ்வு தந்தை செல்வா அரங்கத்தில் இன்று வியாழக்கிழமை (30) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு பிரதம விருந்தினர் உரை ஆற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

கல்வி கண்காட்சி என்று மலையகத்தை பார்க்கும்போது மலைகளையும்,நிர்வீழ்சியையும் எப்போதாவது தேயிலை தோட்டத்தை பார்ப்பதுண்டு ஆனால் இந்த மக்களின் வாழ்க்கை முறைகள், குடிசைகள், லயன்கள், மக்களின் வாழ்வியல்கள் போன்றவற்றை பார்ப்பதற்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்திகொடுப்பதில்லை. இதனால் அவற்றை நாம் அறியாமல் இருந்திருக்கிறோம். ஆனால் இன்று இந்த கண்காட்சியூடாக மலையக மக்களின் வாழ்கை முறைகள் துன்ப துயரங்கள் அவர்கள் கொண்டுவரப்பட்ட முறைகள் தொழில்கள் இலங்கையின் பொருளாதாரத்தில் அவர்கள் ஆற்றிய பங்களிப்பு எம் கண்முன்னே கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சி மலையக மக் களின் வரலாற்றின் ஆவணமாகும். இலங்கையின் வரலாறாகும், ஆவணமாகும். மாணவர்கள் இதனை உணர்ந்து கொள்ளும் வகையில் பயனுள்ளதாக உள்ளது. அனைத்து மாணவர்களும் கண்காட்சியில் பங்குபற்றி இந்த மக்களின் வாழ்வியலை அறிந்து கொள்ளவேண்டும் என்றார்.