ஹிசிஞ்சர் நிக்சன் போர்ட் அரசாங்கங்களில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் இராஜாங்க செயலாளராகவும் பணியாற்றியிருந்தார்.
அமெரிக்க வெளிவிவகார பாதுகாப்பு கொள்கைகளில் முக்கியமான சர்ச்சைக்குரிய பங்களிப்பை அவர் வழங்கியிருந்தார்.
1923 ம் ஆண்டு ஜேர்மனியில் பிறந்த ஹிசிஞ்சர் அவரது குடும்பத்தினர் ஜேர்மனியிலிருந்து தப்பியோடியவேளை அமெரிக்காவிற்கு சென்றார்.
1943இல் அமெரிக்க பிரஜையான அவர் பின்னர் அமெரிக்க இராணுவத்திலும் புலனாய்வு பிரிவிலும் பணியாற்றியிருந்தார்.

