பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் கைதானவர் பொலிஸ் கூண்டில் தற்கொலை!

148 0

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்புக் கூண்டில்   வைக்கப்பட்டிருந்த   சந்தேக நபர் ஒருவர்  தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் ஹோமாகம, பனாகொட, ரொமியல் மாவத்தையில் வசிக்கும் 54 வயதுடையவராவார்.

ஹோமாகம, பனாகொட மாதெனியவத்த பிரதேசத்தில் 19 வயதுடைய யுவதி ஒருவரின்  முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் அத்துருகிரிய பொலிஸாரின்  சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் தடுப்புக் கூண்டில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.