உலகளாவிய ரீதியில் நெருங்கியவர்கள் மூலமான பாலியல் வன்முறையில் தென்கிழக்கு ஆசியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
இதன்காரணமாக சுமார் 33 சதவீதமான பெண்கள் பாதிக்கப்படுகின்றனர் என தென்கிழக்கு ஆசியாவிற்கான உலக சுகாதரா ஸ்தாபனத்தின் பணிப்பாளர் வைத்தியர் பூனம் கேத்ரபால் சிங் தெரிவித்துள்ளார்.
பாலின ரீதியான வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் செயல்பாட்டின் போது இந்த ஆபத்தான போக்கை நிவர்த்தி செய்ய கூட்டு நடவடிக்கையின் அவசரத் தேவையை அவர் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.
உலக சுகாதரா ஸ்தாபனத்தின் மதிப்பீட்டின்படி உலகெங்கிலும் 3 இல் 1 பெண் உடலியல் அல்லது பாலியல் ரீதியான வன்கொடுமையை தங்களுக்கு நெருங்கியவர்கள் அல்லது அந்நியர்கள் மூலமாக தமது வாழ்நாளினுள் அனுபவிக்கின்றனர்.
தென்கிழக்கு ஆசியாவில் 33 சதவீதம் அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. நெருங்கியவர்கள் மூலமான பாலியல் வன்முறையை எதிர்ப்பதில் குறிப்பிடத்தக்க சவாலை எதிர்கொள்கிறது.
பெண்களுக்கு எதிரான வன்முறையின் குறிப்பாக நெருங்கியவர்கள் மூலமான பாலியல் வன்முறை ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
காயங்கள் ஏற்படல், நீண்ட கால உடல், மன, பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
மேலும்,பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள், எச்ஐவி, திட்டமிடப்படாத கர்ப்பம் மற்றும் மனநலப் பிரச்சினைகள், பெண்களுக்கு எதிரான வன்முறையை அழுத்தமான பொது சுகாதார அக்கறை மற்றும் மனித உரிமை மீறல் என வகைப்படுத்துதல் ஆகியவை அதில் அடங்குகிறது.

