தப்பிச்செல்ல முயன்ற சந்தேக நபரை துரத்திச்சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் மீது துப்பாக்கிப் பிரயோகம்

176 0

பொலிஸ் சுற்றுவளைப்பின் போது தப்பிச்செல்ல முயன்ற சந்தேக நபரை துரத்திச்சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளதாக தனமல்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு காயமடைந்தவர் தனமல்வில பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஆவார்.

சம்பவத்தின் போது தனமல்வில பிரதேசத்தில் குறித்த சந்தேக நபர் ஒருவரிடத்தில் பொலிஸார் சோதனை நடவடிக்கை முன்னெடுத்துள்ளனர்.

இந்த சோதனை நடவடிக்கையின் போது குறித்த சந்தேக நபர் பொலிஸாரிடம் இருந்து தப்பிச்செல்ல முயன்று காணிக்குள் ஓடிய போது அவரை பின்தொடர்ந்து வந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் தனமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தனமல்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.