வெல்லம்பிட்டியில் போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது

145 0

வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டிகாவத்தை பிரதேசத்தில் 5 கிராம், 46 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 43 கிராம், 900 மில்லிகிராம் ஹேஷ் போதைப்பொருட்களை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று திங்கட்கிழமை (27) வெல்லம்பிட்டிய விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழுவொன்று   அப்பகுதியில்  மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் அங்கொட, கொட்டிகாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடையவர் என்பதுடன் இவர் மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.