கடும் மழை காரணமாக நாவலப்பிட்டி – புடலுஓயா பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இதனால் வாகன சாரதிகள் மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர் .
இதன்படி வீதியில் விழுந்த மண் மற்றும் கற்களை அகற்றும் பணியில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

