ஏடென் வளைகுடாவில் இஸ்ரேலிய எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்

142 0

ஏடென் வளைகுடாவில் தாக்குதலிற்குள்ளான  இஸ்ரேலிய கப்பலை அமெரிக்க கடற்படை காப்பாற்றியுள்ளது

அமெரிக்க இராணுவம் இதனை தெரிவித்துள்ளது.

ஏடன் வளைகுடாவில் சென்ரல்பார்க் என்ற எண்ணெய் கப்பல் அவசர அழைப்பை விடுத்து காப்பாற்றுமாறு வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து யுஎஸ்எஸ் மசன் என்ற கப்பல் உதவிக்கு விரைந்துள்ளது.

இதன்போது ஆயுதமேந்திய ஐவர் கப்பலில் இருந்து தப்பிச்செல்ல முயன்ற வேளை அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய எண்;ணெய் கப்பலின் மாலுமிகள் பாதுகாப்பாக உள்ளனர் என அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

கப்பலை கைப்பற்ற முயன்றவர்கள் யார் என்பது குறித்து அமெரிக்கா எதனையும் தெரிவிக்கவில்லை எனினும் யேமனிலிருந்து ஏவுகணைகள் செலுத்தப்பட்டுள்ளதாக  அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.