பதுளை மாகாண பொது வைத்தியசாலை போதனா வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அத்தோடு, சுமார் 2.26 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர் பிரிவின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

