கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் நீர் விநியோகம் திடீரென தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு, தெஹிவளை – கல்கிசை, கோட்டே மற்றும் கடுவலை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகர சபைக்குட்பட்ட பகுதிகள், கொட்டிகாவத்தை முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் இரத்மலான, கட்டுபெத்த ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
அம்பத்தல சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாகவே நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
திருத்தப்பணிகள் நடைபெற்று வருவதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

