கடந்த 2016ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் பாரிய வாகன விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக மேல் நீதிமன்றில் விசாரணையில் உள்ள வழக்கு விசாரணையை இடைநிறுத்துமாறு அறிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை வெள்ளிக்கிழமை (24) பிறப்பித்துள்ளது.
இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை இந்த இடைக்கால உத்தரவு அமுலிலிருக்கும் என நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதியரசர் நிஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் சமத் மொராயஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவொன்றை விசாரிப்பதற்கு அனுமதியளித்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

