மேதகு.வே. பிரபாகரன் சிந்தனை என்பது தமிழர்களின் விடுதலைக் கோட்பாடு.

95 0

கோட்பாடு என்பது விதிமுறைகளிற்கும் நியதிக்கும் உட்பட்டது. கோட்பாடு என்பது ஆழ்ந்த ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டதும், அறிவு சார்ந்ததுமான ஒரு பொதுமைப்படுத்தும் சிந்தனையை அல்லது அச்சிந்தனையின் பெறுபேறுகளைக் குறிக்கும். அறிவியல் உண்மைகளை விதி என்றும் கோட்பாடு என்றும்தான் கூறுகிறோம். கோட்பாடு என்பது உண்மையானது அதனை நாமாகவோ காலத்திற்கு ஏற்பவோ மாற்ற முடியாது.

அதனால் தான் தமிழீழத்திற்கான வழிவரைபடத்தை பிரபாகரன் கோட்பாடு எனச் சொல்கிறோம். தமிழீழம் என்பது ஒரு செயல்திறன் மிக்க கோட்பாடு என்பதை தனது உயிரைப் பணயம் வைத்துத்தான். தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் உருவாக்கினார். உலகில் இன்று நடைமுறையிலுள்ள தத்துவங்கள், கோட்பாடுகள் எல்லாம் ஒருகாலத்தில் நிராகரிக்கப்பட்டவைதான். இதில் சோக்ரடீஸ், பிளேற்றோ. அரிஸ்டாட்டில், டார்வின் போன்றவர்களும் விதிவிலக்கல்ல. இதிலுள்ள சிறப்பம்சம் யாதெனில் ஆரம்பத்தில் நிராகரிக்கப்பட்ட மேற்குறித்த தத்துவ மேதைகளின் கோட்பாடுகளை, தத்துவங்களை அந்தந்த இனமக்கள் தான் வரலாறாக காவிச்சென்றார்கள். உலகம் முழுவதும் பரவச்செய்தார்கள்.

இந்த தத்துவமேதைகளின் சிந்தனைகளை உலகம் இன்று போற்றிப் பாதுகாக்கிறது. இது எவ்வாறு சாத்தியமானது. இதைவிட மேலாக தமிழீழ விடுதலைப்போரிலே. தேசியத்தலைவரால் வளர்த்தெடுக்கப்பட்ட போராளிகளும், வழிநடத்தப்பட்ட மக்களும் அளப்பரிய தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் புரிந்துள்ளனர். இதன்பின்னால் இருந்த உழைப்புகள் அர்ப்பணிப்புகள் எத்தகையது என்பதை உலகமே அறியும். *தமிழீழக் கோட்பாட்டை நான் கைவிட்டாலும் என்னை எனது மெய்ப்பாதுகாவலர் சுட்டுக் கொல்லலாம் இந்த வரலாற்றுக் கட்டளைதான் தேசியத்தலைவர் மேதகு பிரபாகரனை என்றைக்கும் தமிழினத்தின் தலைவராக தமிழர்களின் ஆழ்மனதில் நீக்கமற நிறைத்திருக்கிறது.

எனவே பிரபாகரன் சிந்தனை என்பது தமிழர்களின் விடுதலைக் கோட்பாடு அதை எந்தக் கொம்பனாலும் மறுக்கவும் முடியாது மாற்றவும் முடியாது. அப்படி யாராவது தேசியத்தலைவரின் சிந்தனையையும், அவர் வகுத்த தமிழீழத்திற்கான வழிவரைபடத்தையும் மாற்ற முனைந்தால் அதுவே அவர்களிற்கான புதைகுழியாக அமையும். ஏனென்றால் மேதகு பிரபாகரன் மூலோபாய சிந்தனை ஒரு தனிமனித இராணுவம். (Medagu Prabhakaran’s strategy was a one-man army)
அனைத்துலகச் சிந்தனைப்பள்ளி.