திருக்கோவில் பிரதேசத்தில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த தம்பதியினர்

138 0

அம்பாறை- திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் கணவன் மனைவி இருவரும் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவமானது இன்று(21.11.2023) இடம்பெற்றுள்ளது.

இருவரினதும் சடலங்களும் விநாயகபுரம் பகுதியில் உள்ள வீட்டினுள் தவறான முடிவை மேற்கொண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.இது பற்றிய மேலதிக விசாரணையை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.