கோப் குழுவின் முன்னாள் தலைவரால் குழு அதிகாரிக்கு பாலியல் வன்கொடுமை : உரிய நடவடிக்கை எடுங்கள்

146 0

கோப் குழுவின் முன்னாள் தலைவரால் குழுவின் அதிகாரி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். பாராளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாக்க பாராளுமன்ற  செயலாளர் நாயகம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (17) விசேட கூற்றை முன்வைத்து  உரையாற்றுகையில்,  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

கோப் குழுவின் முன்னாள் தலைவர் குழுவின் அதிகாரி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டுள்ளது. இது குறித்து அந்த அதிகாரி   பொறுப்பான தரப்பினருக்கு முறைப்பாடளித்துள்ளார். இவ்வளவு தாழ்வு நிலையை அடைந்திருக்கும் போது ஏன்  உரிய நடவடிக்கை  எடுக்கக் கூடாது?

பாராளுமன்ற 132 நிலையியற் கட்டளைகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பாராளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை எடுங்கள்  என சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.