பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள மற்றுமொரு கட்டிடம் தொடர்பில் அம்பத்தலே பிரதேசத்தில் இருந்து எமக்கு இன்று தகவல் கிடைத்துள்ளது.
அம்பத்தலே சமுத்திராதேவி வித்தியாலயத்தில் 1988 ஆம் ஆண்டு கட்டப்பட்ட 3 மாடிக் கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.
இது தொடர்பில் பெற்றோர்கள், அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய போதிலும் இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
இதன் காரணமாக பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் பிள்ளைகளின் பெற்றோர்கள் இன்று (16) பாடசாலைக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

