பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

155 0

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) விடுத்துள்ளது.

முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை 

பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்ல, ஹப்புத்தளை மற்றும் ஹாலி எல பிரதேச செயலகப் பிரிவுகள்)  மற்றும்  அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

இரத்தினபுரி மாவட்டத்தில் பெல்மடுல்ல, அயகம, நிவித்திகல, கஹவத்த மற்றும் கிரியெல்ல பிரதேச செயலகப் பிரிவுகள்  மற்றும்  அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை 

கண்டி மாவட்டத்தில் தும்பனை பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

இரத்தினபுரி மாவட்டத்தில் கலவான, இரத்தினபுரி, பலாங்கொட, குருவிட்ட, எலபாத, கொலொன்ன, எஹெலியகொட, ஓப்பநாயக்க, கொடகவெல, வெலிகேபொல மற்றும் இம்புல்பே பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.