பொல்பிட்டிகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் பொல்பிடிகல பொலிஸாரால் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் பொல்பிட்டிகல பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடையவர் ஆவார்.
பொல்பிட்டிகல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்பிட்டிகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

