குருணாகல் கணினி நிறுவனத்தில் தீ பரவல்

133 0

குருணாகல் பிரதேசத்தில் அமைந்துள்ள இரண்டு மாடி கட்டிடத்தில் அமைந்துள்ள கணணி நிறுவனமொன்றில் நேற்று (14) தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக குருணாகல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருணாகல் பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் குருணாகல் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவனர் இணைந்து தீ பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

தீ பரவலில் நிறுவனத்தின் சில உபகரணங்கள் சேதமடைந்துள்ளதோடு எவ்வித உயிர் சேதங்களும் காயங்களும் ஏற்பட்வில்லை என குருணாகல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மின்கசிவு காரணமாக இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருணாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.