ஹிங்குராங்கொடவில் காட்டு யானை தாக்கி பெண் பலி

166 0

ஹிங்குராங்கொட பாலுவேவ பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் இன்று (15) காலை  உயிரிழந்துள்ளதாக ஹிங்குராங்கொட பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் சந்துசிறி மல்காந்தி என்ற 60 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாவார்.

இவர் ஹிங்குராங்கொட பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டலில் பணியாற்றுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் இன்று தனது வீட்டிலிருந்து ஹோட்டலிற்கு சென்று கொண்டிருந்த போது காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக ஹிங்குராங்கொட பொலிஸார் தெரிவித்தனர்.