விசேட தெரிவுக்குழுவை நியமித்து ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் முறைகேடுகளை விசாரணை செய்யுங்கள்

123 0

எதிர்க்கட்சியின் உறுப்பினரது தலைமைத்துவத்தில்  ஸ்ரீ லங்கா கிரிக்கெட் சபையின் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்ய விசேட தெரிவுக்குழுவை நியமிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார தலைமையில் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் சபையின் முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை இன்று சபையில் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.