கிரேனில் மோதிய மோட்டார் சைக்கிள் – ஒருவர் பலி

38 0

கிராண்ட்பாஸ் வெல்ஸ்குமார மாவத்தை பகுதியில் மோட்டார் சைக்கிள், கிரேனுடன் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முதற்கட்ட விசாரணைகளின் போது, ​​அப்பகுதியின் அபிவிருத்திப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட கிரேனின் இரும்புக் கற்றையின் ஒரு பகுதி வாகனத்தின் வெளியே காணப்பட்டமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது கணவன் மற்றும் மனைவியும் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளதுடன், விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பின்னால் அமர்ந்து சென்றவர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் எடரமுல்லை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் கிரேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.