சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது.
அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும்.மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடலோர பகுதி அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
17ந்தேதி நகரும் திசையில் மாற்றம் ஏற்பட்டு வடமேற்கு வங்கக்கடலில் ஒடிசா கடற்கரை அருகே செல்லக்கூடும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

