பண மோசடிச் சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்களை அறிவுறுத்தும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!

192 0

உறவினர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி போலி தொலைபேசி அழைப்புகள் மூலம் பண மோசடி செய்யும் சம்பவங்கள் இடம்பெறுவது தொடர்பில்  பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

எனவே, இவ்வாறான தொலைபேசி அழைப்புக்களை நம்பி பணத்தை கொடுத்து  மோசடி நடவடிக்கைகளில் சிக்க வேண்டாம் எனவும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தெரியாத ஒரு நபரிடமிருந்து  இது தொடர்பில் தொலைபேசி அழைப்பு வந்தால் அதனைச்  சரிபார்க்கவும். இந்தப் பணத்தைக் கேட்பவர் உண்மையான நோக்கத்துக்காகவா இதைக் கேட்கிறார் என்பதை முறையாக உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.