40 ஆயிரம் ஏக்கர் அளவிலான சோள பயிர்ச் செய்கைக்குரிய உரங்களை இலவசமாக வழங்கவுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
யூரியாவுக்கு மேலதிகமாக டி எஸ் பி மற்றும் எம் ஓ பி ஆகிய உரங்களும் இலவசமாக வழங்கப்படவுள்ளது.
அத்துடன், சோளப் பயிர்ச்செய்கைக்கு தேவையான நிலத்தை பண்படுத்தும் பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் சிறிய அளவிலான விவசாய தொழில்முனைவோர் திட்டத்தின் ஊடாக இந்த போகத்தில் ஐந்து மாவட்டங்களில் 40 ஆயிரம் ஏக்கர் சோளம் பயிரிடப்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

