சென்னை-திருச்சி இடையே சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

419 0

சென்னை-திருச்சி இடையே சிறப்பு கட்டண ரெயிலை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.

தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

* சென்னை சென்டிரல்-ஆமதாபாத் இடையே சிறப்பு கட்டண ரெயில் (வண்டிஎண்:06045). ஏப்ரல் மாதம் 15, 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமை) சென்னை சென்டிரலில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு, திங்கட்கிழமை அதிகாலை 5.45 மணிக்கு ஆமதாபாத்தை சென்றடையும்.

* சென்னை எழும்பூர்- திருச்சி இடையே சிறப்பு கட்டண ரெயில் (06047). ஏப்ரல் மாதம் 4 மற்றும் 7 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து காலை 7.40 மணிக்கு புறப்பட்டு, அதே நாள் மாலை 6.30 மணிக்கு திருச்சியை சென்றடையும்.* திருச்சி-சென்னை எழும்பூர் இடையே சிறப்பு கட்டண ரெயில் (06048). ஏப்ரல் மாதம் 3 மற்றும் 6 ஆகிய தேதிகளில் திருச்சியில் இருந்து காலை 8.15 மணிக்கு புறப்பட்டு, அதே நாள் மாலை 6.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தொடங்குகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.