யாழ் மாவட்ட செயலக நுழைவாயிலை முற்றுகையிட்டு கடற்தொழிலாளர்கள் போராட்டம்

128 0

யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சம்மேளனத்தின் எற்பாட்டில் இந்திய இழுவை மடிப்படகுகளை கட்டுப்படுத்த கோரி யாழ் மாவட்ட செயலகத்தின் நுழைவாயிலை மூடி இன்று வெள்ளிக்கிழமை (10) காலை போராட்டம் இடம்பெற்றது.

வெள்ளிக்கிழமை காலை யாழ் மாவட்ட செயலகத்தில் ஓன்றுகூடிய கடற்தொழிலாளர் மாவட்டசெயலக பிரதான வாசல் கதவுகளை மூடி இந்திய இழுவை மடி படகுகளை கட்டுப்படுத்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய இழுவை மடி தொழிலால் எமது வாழ்வாதாரம் பாதிக்கபடுகிறது தொடர்ந்தும் இவர்களது அத்து மிறல்களால் தொடர்சியான பாதிப்புகளை நாம் சந்தித்தவண்ணம் உள்ளோம் எமக்கு திலையான ஒர் தீர்மானத்தை பெற்றுத்தருமாறு கோரிக்கை முன்வைத்தார்கள்.

குறித்த போராட்டத்தில் மாவட்ட செயலருக்கான மகஜர் ஒன்றும்  கையளிக்கப்பட்டது. போராட்டத்தின் போது மாவட்ட செயலக வாசலை மூடி போராட்டம் செய்யாது ஒரமாகநினரறு போராடுமாறு அறிவுறித்தியமை குறிப்பிடத்தக்கது.