சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் 12 பேர் கொழும்பில் கைது!

182 0

சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் போராட்டத்தில் ஈடுபட்ட 12 மாணவர்களை பொலிஸார் வியாழக்கிழமை (09) கைது செய்துள்ளனர்.

போராட்டத்தைக் கலைப்பதற்காக மருதானை பகுதியில் பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டனர்.

மருதானை பொலிஸ் நிலையத்துக்கு அருகாமையிலிருந்து சுகாதார அமைச்சு வரை இந்த எதிர்ப்பு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், டீன்ஸ் வீதி மூடப்பட்டதையடுத்து, மாணவர்கள் மருதானை பொலிஸுக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.