துப்பாக்கியுடன் ஒருவர் கைது ; ருவன்வெலயில் சம்பவம்

133 0

தம்பகல்ல – ருவன்வெல பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் நேற்று புதன்கிழமை (08) ருவன்வெல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ருவன்வெல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ருவன்வெல பிரதேசத்தை சேர்ந்த 71 வயது நபர் ஆவார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ருவன்வெல பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.