தங்காலை கடலில் மூழ்கி ஜெர்மனி பிரஜை உயிரிழப்பு

146 0

தங்காலை கடலில் நீராடியபோது ஜெர்மனிய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர்.

49 வயதுடைய ஜெர்மனிய பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக தங்காலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தங்காலை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.