தங்காலை சீனிமோதர பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த வெளிநாட்டவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், அப்போது அங்கிருந்த சிலரால் மீட்கப்பட்டு தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 49 வயதான ஜெர்மனிய பிரஜை என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

