அகதிகளுக்கான சலுகைகளில் கைவைக்க முடிவு செய்துள்ள ஜேர்மனி

240 0

ஜேர்மன் நகரங்கள் பல அகதிகள் வருகையால் நிரம்பி வழியும் நிலையில், தனது அகதிகள் கொள்கைகளை மறுசீராய்வு செய்யும் ஜேர்மனி, சில மாற்றங்களை தற்போது அறிவித்துள்ளது.

ஜேர்மனியின் அகதிகள் கொள்கையை திருத்துவதற்கான தொடர் நடவடிக்கைகளுக்கு, பெடரல் அரசும், 16 மாகாணங்களில் பிரீமியர்களும் உடன்பட்டதையடுத்து, அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், இது ஒரு வரலாற்று தருணம் என்று கூறியுள்ளார்.

அகதிகளை ஜேர்மனிக்கு ஈர்க்கும் விடயம்

பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை விட ஜேர்மனியில் அகதிகளுக்கான சலுகைகள் மிகவும் அதிகமாக உள்ளன. இதனால்தான் ஜேர்மனியின்பால் அகதிகள் ஈர்க்கப்படுகின்றனர் என்கிறார்கள், கன்சர்வேடிவ் அரசியல்வாதிகள். ஆகவே, புதிதாக ஜேர்மனிக்கு அகதிகளாக வருபவர்களுக்கு குறைவான பணமே கொடுக்கவேண்டும் அல்லது இனி பணமே கொடுக்கக்கூடாது என்று அவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

 

அறிமுகமாக இருக்கும் மாற்றங்கள்

தற்போது, புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவதற்கு, சராசரியாக 6 முதல் 18 மாதங்கள் வரை ஆகிறது. அந்த காலகட்டத்தில் அகதிகள் அதிக சலுகைகளைப் பெறுகிறார்கள். அந்த வரம்பு இப்போது 36 மாதங்களாக நீட்டிக்கப்பட உள்ளது. அந்த காலகட்டத்தில், இனி மாதம் ஒன்றிற்கு அகதிகளுக்கு 410 யூரோக்கள் வழங்கப்பட உள்ளது.

மாகாண அரசுகள் மகிழ்ச்சி

இந்த நடவடிக்கைகள் மாகாண அரசுகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதை தெளிவாக உணர முடிகிறது. கொள்கை மாற்ற அறிவிப்புகளுக்குப் பின் பேசிய நிதி அமைச்சரான Christian Lindner, இந்த மாற்றங்களால் அரசுக்கு ஒரு பில்லியன் யூரோக்கள் சேமிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

அகதிகளுக்கான சலுகைகளில் கைவைக்க முடிவு செய்துள்ள ஜேர்மனி | Germany Decided Hand Over Concessions For Refugees

இனி பணம் எடுக்க முடியாது

இனி அகதிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை, பணமாக இல்லாமல் ஒரு போன் அட்டை வடிவில் வழங்கப்படும். அதைப் பயன்படுத்தி பயணம் செய்யலாம், அடிப்படைத் தேவைகளுக்கான சில பொருட்கள் வாங்கலாம். ஆனால், பணம் எடுக்கவே முடியாது.

எல்லைக் கட்டுப்பாடுகள்

போலந்து, செக் குடியரசு, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுடனான எல்லைகளில் கட்டுப்பாடுகள் நீடிக்க உள்ளன.

புகலிட நடவடிக்கைகளை வேகப்படுத்த திட்டம்

புகலிடக்கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுதல் விரைவாக்கப்பட உள்ளது. ஆனால், அதன் நோக்கமோ, ஜேர்மனிக்கு புலம்பெயர்வோருக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி, புலம்பெயர்தலைக் குறைப்பதாகும் என்று வெளிப்படையாகவே சொல்லிவிட்டார் பவேரிய பிரீமியரான Markus Söder.

அகதிகளுக்கான சலுகைகளில் கைவைக்க முடிவு செய்துள்ள ஜேர்மனி | Germany Decided Hand Over Concessions For Refugees

மாகாணங்களுக்கு கூடுதல் நிதி

இனி, மாகாண அரசுகள் ஒவ்வொரு முறையும் அகதிகளுக்கான நிதிக்காக பெடரல் அரசிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தத் தேவையில்லை. ஏனென்றால், இனி ஒரு அகதிக்கு ஆண்டொன்றிற்கு 7,500 யூரோக்கள் வீதம் பெடரல அரசால் மாகாண அரசுகளுக்கு நிதி வழங்கப்பட உள்ளது.

கடுமையான நாடுகடத்தல் விதிகளால் பெரிய அளவில் பலனில்லை

தற்போது ஜேர்மனியில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் சுமார் 250,000 பேர் உள்ளனர். ஆனாலும், அவர்களில் சிலரை அதிகாரிகளால் கண்காணிக்கவே முடியாத நிலை காணப்படுகிறது.அத்துடன், அந்த 200,000 பேரையும் நாடுகடத்தவும் முடியாது. காரணம், எந்த நாடும் அவர்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை, அல்லது அவர்களுடைய நாட்டில் போர், அல்லது அவர்களுக்கே கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் இருப்பதால், அவர்கள் சொந்த நாடுகளில் சிகிச்சை பெற முடியாது என பல்வேறு காரணங்களால், அவர்களை தங்கள் சொந்த நாட்டுக்கும் அனுப்பமுடியாது.

ஆக மொத்தத்தில், கடுமையான நாடுகடத்தல் விதிகளாலும் ஜேர்மனிக்கு பெரிய அளவில் பலனில்லை என்பதுதான் உண்மை!