ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் குழுக்களால் 32 பேர் சுட்டுக் கொலை: பிரதமர் தினேஷ் தெரிவிப்பு!

128 0

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் குழுக்கள் 62 துப்பாக்கிப் பிரயோக சம்பசங்களை நிகழ்த்தியுள்ளதாகவும் இதனால் 32 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 37 பேர் காயமடைந்துள்ளதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தன புதன்கிழமை (8) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மேஜர் சுதர்சன் தெனிபிட்டிய எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களை அடக்குவதற்கு  நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரிகளைக் கொன்று அச்சுறுத்திய ஏழு சம்பவங்களும் இந்த ஆண்டு இடம்பெற்றுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.