இஸ்ரேல் ஹமாஸ் மோதல் மத்தியகிழக்கில் இளைஞர்கள் மத்தியில் கடும் வெறுப்புணர்வை உருவாக்குகின்றது என நோபல் பரிசுபெற்ற கைலாஸ் சட்யார்த்தி தெரிவித்துள்ளார்.
இளைஞர்கள் மீது யுத்தத்தின் தாக்கம் மிகமிக ஆபத்தானது என குறிப்பிட்டுள்ள அவர் இதனால் கிளர்ச்சிகள் ஏற்படலாம் பழிவாங்கும் அல்லது வெறுப்புணர்வு நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
பகைமை உணர்வு அதிகரிக்கின்றது இதனால் நாங்கள் கடும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறுவர்கள் ஒருபோதும் யுத்தங்கள் ஆயுதமோதல்களை தூண்டுவதில்லை என தெரிவித்துள்ள அவர் ஆனால் அவர்களே அதிக விலையை செலுத்துகின்றனர் எனவும் நோபல் பரிசுபெற்ற கைலாஸ் சத்தியாத்திரி தெரிவித்துள்ளார்.
அவர்கள் இந்த குற்றங்களிற்கு பொறுப்பல்ல ஆனால் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் இதற்கான விலையை செலுத்தவேண்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்யார்த்தி உலகம் முழுவதும் சிறுவர்களை பாதுகாக்கும் அவரது நடவடிக்கைகளிற்காக 2014 இல் சமாதானத்திற்கான நோபல் பரிசை பெற்றார்.
பாலஸ்தீன சிறுவர்கள் எங்கள் சிறுவர்கள் இஸ்ரேல் சிறுவர்களும் எங்கள் சிறுவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

