மின்சாரம் தாக்கி தச்சுத் தொழிலாளி பலி

91 0

காலி – எல்பிட்டிய, யக்குடுவ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் காலி – எல்பிட்டிய, யக்கட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த விமல் சிசிர குமார என்ற 43 வயதுடைய தச்சுத் தொழிலாளி ஆவார்.

இளைஞர் குழு ஒன்றினால் வீதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவம் ஒன்றிற்கு விநயோகிக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கியே அவர் உயிரிழந்துள்ளமை பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.