மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மாவட்டத்தின் பெரகல, பத்கொட பிரதேசத்தில் 42 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.குறித்த பகுதியில் அண்மையில் ஏற்பட்ட மண்சரிவினால் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.இடம்பெயர்ந்த குடும்பங்களில் சிலர் அருகில் உள்ள பாடசாலையில் தஞ்சம் புகுந்துள்ளனர், ஏனையோர் உறவினர் வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.மண்சரிவு காரணமாக ஹப்புத்தளை – யஹலபெத்த வீதியூடான வாகன போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.இதற்கிடையில், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் ஆறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.பதுளை மாவட்டத்தில் ஹப்புத்தளை மற்றும் ஹல்துமுல்ல பிரதேச செயலகங்களுக்கும் கண்டி மாவட்டத்தின் தும்பனை பிரதேச செயலகத்திற்கும் 2 ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஹம்பாந்தோட்டை, கண்டி, கேகாலை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகங்களுக்கு முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

