கொழும்பு – கண்டி பிரதான வீதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தமையினால் அவ்வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
நெலும்தெனிய, உடுகும்புர பிரதேசத்திலேயே இவ்வாறு பாரிய மரம் ஒன்று வீதியில் விழுந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன் காரணமாக கொழும்பு – கண்டி பிரதான வீதியின் போக்குவரத்து ஒரு பாதை வழியாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

