நிகழ்நிலை காப்பு சட்டமூலம் : உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள விடயம் என்ன?

120 0

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தின் பெரும்பாலான ஏற்பாடுகளை நிறைவேற்ற வேண்டுமாயின் அதற்கு விசேட பெரும்பான்மை அவசியம் என்றும், ஒருசில ஏற்பாடுகள் குழுநிலையில் திருத்தம் செய்யப்படுமாயின் சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ சபைக்கு அறிவித்தார்.

பாராளுமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை (07) இடம்பெற்ற அமர்வின் போது  உயர்நீதிமன்றத்தின் அறிவிப்புக்களை அறிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் அறிவித்ததாவது,

அரசியலமைப்பின் 121 (1)ஆம் பிரிவின் பிரகாரம் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட நிகழ்நிலை காப்பு சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் தனது வியாக்கியானத்தை அறிவித்துள்ளது. இந்த சட்டமூலத்தின் 5,7,9,11,12,13,14,15,16,17,18,19,20,21,22,23,24,25,26,27,28,30,31,32,36,42,45,53,54 ஆகிய சரத்துக்களை நிறைவேற்றுவதாயின் அதற்கு பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை அவசியம் என உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், சட்டமூலத்தின் 3,5,7,9,11,12,13,14,14,16,17,18,19,20,21,22,23,24,25,29,30,31,32,37,36,42,53,55,56 ஆகிய சரத்துக்கள் பாராளுமன்றத்தில் குழுநிலையில் திருத்தம் செய்யப்படுமாயின் சட்டமூலத்தை  சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே, மேற்குறிப்பிடப்பட்ட விடயங்களுக்கு அமைவாக சட்டமூலமும் மற்றும்  அதன் விதிவிதானங்கள் அரசியலமைப்புக்கு முரணல்ல என்று உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது என்றார்.