யேர்மன் நாட்டு ஜனாதிபதியைச் சந்தித்த ஈழத்தமிழர் திரு. ஜெனீவன் நல்லையா

1341 0

யேர்மனியில் றுஸ்ஸெல்ஸ்கைம் (Rüsselsheim am Main) நகரில் வசித்து வரும் திரு. ஜெனீவன் நல்லையா அவர்கள், ஈழத்தில் பிறந்து, பத்து வயதில் யேர்மனிக்கு வருகைதந்து, பாடசாலைக்கல்வியைக் கற்று, தொழிற்கல்வி பயின்று, 12 வருடங்கள் மின்சக்தி வர்த்தக நிறுவனத்தில் பணிபுரிந்த வேளையில், மின்சக்தித் தொழில்நுட்பத்துறை வல்லுநராகத் தேர்ச்சிபெற்று, இன்று 10 வருடங்களாக JenTech Elektro என்ற மின்கக்தித் தொழில்நுட்பத்துறை நிறுவனத்தையும் நடாத்தி வருகின்றார். 21 வருடங்களாகத் தொடர்ந்து இத்துறையில் பயணிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று மற்றுமோர் மேற்படிப்பை மேற்கொண்டிருக்கும் இவருக்கு, அவரது திறமையை உற்றுநோக்கி, பிராங்பேர்ட் கைப்பணி வேலைக்கூடமானது (Handwerkskammer Frankfurt-Rhein-Main) சம்பியா நாட்டிற்கு அவரைப் பயிற்றுனராக அனுப்பி, அங்கு யேர்மன் நாட்டு ஜனாதிபதி திரு. ஸ்ரைன்மையர் அவர்கள் (Bundespräsident Herr Frank-Walter Steinmeier) முன்னிலையில் தன்னை அறிமுகப்படுத்தி, தனது தொழில் மற்றும் தன் பணியைப் பற்றி விளக்குவதற்கான ஓர் அரிய வாய்ப்பினையும் 02.11.2023 அன்று வழங்கியுள்ளது. இச்சந்திப்பு மிகச் செவ்வனவே நடைபெற்றுள்ளது. அவருக்கு எங்கள் மகிழ்வான, பெருமிதமான வாழ்த்துகள்!

இந்நிகழ்வானது, தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும், தமது அடையாளத்தை நிலைநாட்டுவதற்கு, கல்வியும், விடாமுயற்சியும் மட்டுமே வழிவகுக்கின்றது என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றது.