மின்கட்டணம் அதிகரித்துள்ளதால்,தமது தொழிலை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, அலங்கார மீன் வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் நன்னீர் மற்றும் உப்பு நீர் அலங்கார மீன்கள் வாழும் தொட்டிகளுக்கு தொழில்துறையினர் செயற்கை ஆக்சிஜன் சப்ளை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மின்கட்டண உயர்வால் கடும் அவதிக்குள்ளாகி வருவதாகவும் கூறுகின்றனர்.
மேலும், வரவு செலவுத் திட்டத்தில் மின்கட்டணத்தில் நிவாரணம் வழங்க வேண்டும் என அலங்கார மீன்களை வளர்க்கும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

